கும்பகோணத்தில் சிதம்பரம் தில்லை தீட்சிதர்கள் அராஜகத்தை கண்டித்து விடுதலை தமிழ்புலிகள் கட்சிமற்றும் மே பதினேழு இயக்கம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ….

விடுதலை தமிழ்புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன், மே பதினேழு இயக்கம் தலைவர் திருமுருகன் காந்தி பங்கேற்பு.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே காந்தி பூங்கா எதிரே சிதம்பரம் தில்லை தீட்சிதர்கள் அராஜகத்தை கண்டித்தும், சிதம்பரம் தில்லையப்பர் கோவிலை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என்றும் தமிழர் உரிமையை மறுப்பதற்கு துணை போகும் பாஜக தமிழர் விரோத கட்சிகளை கண்டித்து விடுதலை தமிழ்புலிகள் கட்சியின் தலைவர் குடந்தை அரசன்தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மே பதினேழு இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி முன்னிலை வகித்து கண்டன உரையாற்றினார்.
மேலும் ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கட்சி பிரமுகர்களும் , தலைவர்களும், கழக நிர்வாகிகள் பொதுமக்கள் என 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி கண்ட ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.