கும்பகோணம் அருகே பந்தநல்லூரில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 2 கொள்ளையர்கள் கைது 7 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மீட்பு.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே கடந்த 3 மாதங்களாக பந்தநல்லூர் பகுதியில் நடந்த தொடர் கொள்ளை சம்மந்தமாக கொள்ளையர்களை பிடிக்க தஞ்சாவூர் காவல் கண்கானிப்பாளர் “ஆசிஷ் ராவத் IPS அவர்களின் உத்தரவின்படி திருவிடைமருதூர் உட்கோட்ட காவல் துணைக் கண்கானிப்பாளர் ஜாபர் சித்திக் அவர்கள் மேற்பார்வையில்,
தனிப்படை உதவி ஆய்வாளர் காமராஜ் தலைமையில் காவலர்கள் ரமணி கார்த்திக் விக்னேஷ் முனியப்பன் முகமதுரியாஷ் ஆகியோர்கொண்ட தனிப்படை தீவிர வேட்டையில் கொள்ளையில் ஈடுபட்ட ஆசைமணி 24 த/பெ ஜோதிமணி விக்னேஷ் 24 த/பெ கருணாநிதி இருவரும் சாய்னாபுரம் பந்தநல்லூர் ஆகியவர்களை கைது செய்து அவரகளிடமிருந்து சுமார் 7 லடசம்”மதிப்புள்ள தங்க நகைகள் வெள்ளி பொருட்கள் மீட்கபட்டுள்ளது.
மேலும் சோழபுரம் பகுதியில் திருட்டில் ஈடுப்பட்ட சிதம்பரத்தைச்சேர்நத ஆசைகுமார் த/பெ ரெங்கநாதன் என்பவரை கைது செய்து 5 பவுன் நகை கைப்பற்றப்பட்டது. மொத்தம் தனிப்படையினரால் சுமார் 20 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் வெள்ளி பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.