கும்பகோணம் பொற்றாமரை குளத்திற்கு தண்ணீர் நிரப்ப ரூ.19 லட்சத்தில் ஆழ்துளை கிணறு மின்மோட்டார் வசதி அன்பழகன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற சாரங்கபாணி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்த மான பொற்றாமரை குளம் பல்வேறு சிறப்பு பெற்றது. இந்த குளத்தில் மகாமக விழா வின்போது திரளான பக்தர் கள் புனிதநீராடுவது வழக்கம். மேலும் ஒவ்வொரு ஆண்டும் சாரங்கபாணி பெருமாள் மாசிமக விழாவின் போது பொற்றாமரை குளத்தில் தெப்பத்தில் எழுந்தருளி தெப் பத்திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு மாசி மகதெப் பத்திருவிழா நடத்துவதற்கு குளத்தில் தண்ணீர் நிரப்ப வசதி ஏற்படுத்தி தர வேண் டும் என பல்வேறு தரப்பினர் அன்பழகன் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர்.இதை யடுத்து பொற்றாமரை குளத் தில் தண்ணீர் நிரப்பஏதுவாக தொகுதி மேம்பாட்டு நிதியி லிருந்து ரூ. 19.60 லட்சம் மதிப் பீட்டில் புதிய ஆழ்துளை கிணறு மற்றும் மின்மோட்டார் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. அன்பழகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் ராமலிங்கம் எம்.பி. கும்பகோணம் மாநகராட்சி துணை மேயர் சு.ப.தமிழழ கன், காவிரி கோட்ட செயற் பொறியாளர் இளங்கோ, வரு வாய் கோட்டாட்சியர் பூர் ணிமா, இந்துசமய அறநிலை யத்துறை உதவி ஆணையர் ராணி, நீர்வளத்துறை உதவிப் பொறியாளர் முத்துக்குமார். கும்பகோணம் தாசில்தார் வெங்கடேஸ்வரன், சாரங்க பாணி கோவில் செயல் அலு வலர் சிவசங்கரி, மாநகராட்சி வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்டபலர் கலந்துகொண்டனர்.
