BREAKING NEWS

கும்மிடிப்பூண்டி அருகே பள்ளி மாணவர்களோடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பழங்குடியின மக்கள். அடுப்பு வைத்து சமைக்க தொடங்கியதால் அதிகாரிகள் பேரதிர்ச்சி.

கும்மிடிப்பூண்டி அருகே பள்ளி மாணவர்களோடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பழங்குடியின மக்கள். அடுப்பு வைத்து சமைக்க தொடங்கியதால் அதிகாரிகள் பேரதிர்ச்சி.

திருவள்ளூர் மாவட்டம்‌ கும்மிடிப்பூண்டி அடுத்த பூவலை ஊராட்சி, இருளர் காலனியில் சுடுகாட்டு பாதை மற்றும் சுற்றுச்சுவர் ஏற்படுத்துவதாக கூறி இரண்டு வருடங்களாக பழங்குடியின மக்கள் அலைக்கழிக்கப்படுவதை கண்டித்து அப்பகுதி மாணவர்கள் பள்ளி சீருடையில் நோட்டுப் புத்தகங்களுடன் கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.nike air max sale sex toys for women nike air jordan 4 black canvas nfl jerseys nike air jordan high top nfl jerseys wig shops nike air max correlate best human hair wigs Human Hair wigs cheap nfl jersey online wig store wigs online nike air jordan high top cheap jerseys for sale 

 

அப்போது மாணவர்கள் புத்தகங்களை வாசிக்க தொடங்கிய நிலையில் பழங்குடியின மக்கள் தீயை மூட்டி சமையல் செய்ய தொடங்கினார்கள். இதனால் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகளிடம், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் சுடுகாட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றி சுடுகாட்டு பாதை, சுற்றுச்சுவர் அமைக்க 13.69 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் திட்டத்தை அமல்படுத்த காலம் தாழ்த்துவது குறித்து பழங்குடி இன மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

 

வட்டாட்சியர் பிரீத்தி ஒரு வாரத்தில் இதற்கான சுமூகமான தீர்வு காண்பதாக வாக்குறுதி அளித்தார். இதனால் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. பழங்குடி மக்களுக்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பாகவும் நிர்வாகிகள் பலர் பங்கேற்றது கண்டன உரை நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS