BREAKING NEWS

கூடுவாஞ்சேரியில் சாலையை கடக்க முயன்ற காவலர் மீது இருசக்கர வாகனம் மோதும் பரபரப்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

கூடுவாஞ்சேரியில் சாலையை கடக்க முயன்ற காவலர் மீது இருசக்கர வாகனம் மோதும் பரபரப்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

செங்கை ஷங்கர், செங்கல்பட்டு.

 

செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி தனியார் கல்லூயில் முதலாம் ஆண்டு பயின்றுவரும் கோவை மாவட்டத்தை சேர்ந்த மாணவர் வெங்கட். (19) இவர் சென்னை தாம்பரத்தில் இருந்து பொத்தேரியில் தான் பயின்றுவரும் கல்லூரிக்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருக்கும் போது கூடுவாஞ்சேரியில் சாலையை கடக்க முயன்ற காவலர் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.

 

 

இந்த விபத்தில் வந்த வெங்கட் மற்றும் சூர்யா ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர். அதேபோல் சாலை கடக்க முயன்ற காவலர் கார்த்திகேயனும் பலத்த காயமடைந்துள்ளார்.

 

உடனே பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து போலீசார் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்து,

சம்பவ இடத்திற்க்கு வந்த ஆம்புலன்ஸ் காயமடைந்த வெங்கட், சூர்யா, கார்திகேயன் ஆகிய மூவரையும் சிகிச்சைக்காக தனியார் மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

 

சென்னை – திருச்சி தேசிய நெடுசாலையில் இருசக்கர வாகானம் மோதி விபத்துக்குளாகும் சிசிடிவி காட்சி வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் தூக்கி வீசிய காட்சி வாகன ஓட்டிகள் மத்தியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )