BREAKING NEWS

கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினால் திமுக அனைத்து தொகுதியிலும் தோல்வியை தழுவும்..!

கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினால் திமுக அனைத்து தொகுதியிலும் தோல்வியை தழுவும்..!

கூட்டணியில் இருக்கும் போது செந்தில் பாலாஜி இப்படி செய்திருக்கக்கூடாது என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது எக்ஸ் சமூக வலைதளத்தில் நீக்கப்பட்ட பதிவு என்று குறிப்பிட்டு, ஒரு போட்டோவை கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

அதில், கரூர் நகர காங்கிரஸ் மகளிர் அணி தலைவர் கவிதா, திமுகவில் இணைந்து விட்டதாகவும், தமிழகம் தலை நிமிர முதல்வர் ஸ்டாலினின் தலைமையே தேவை என்று உணர்ந்து அவர் திமுகவில் இணைந்ததாக செந்தில் பாலாஜி குறிப்பிட்டிருந்தார்.

இந்தப் பதிவுக்கு காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கடும் கண்டனம் தெரிவித்தார். அதாவது, கூட்டணியின் பெயரால் இதுபோன்ற அவமரியாதையை ஒருபோதும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம், என்று குறிப்பிட்டு இருந்தார்.

மேலும், தமிழக மகளிர் காங்கிரசின் கடுமையான எதிர்ப்பைத் தொடர்ந்து அந்தப்பதிவை செந்தில் பாலாஜி நீக்கியுள்ளார்.

Share this…

CATEGORIES
TAGS