கே.வி.குப்பத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்பாட்டம்.
தூத்துக்குடி முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் அந்தப் பகுதியில் மணல் கொள்ளையை தடுக்க சென்ற போது வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதனையடுத்து கே.வி.குப்பம் வாட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டம் வட்டார சங்க தலைவர் தமிழ்வாணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் வருவாய் கிராம ஊழியர்கள் வட்டார தலைவர் சண்முகம், சங்க நிர்வாகிகள் கிராம நிர்வாக அலுவலர்கள், ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்தில்,
வி.ஏ.ஓ லூர்து பிரான்சஸை படுகொலை செய்தவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.முன்னதாக அவரது மறைவிற்கு ஒருநிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.
CATEGORIES வேலூர்
TAGS VAO லூர்து பிரான்சிஸ் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம்கிராம நிர்வாக அலுவலர் லூர்து ஃபிரான்ஸிஸ்கே.வி.குப்பம் வாட்டாட்சியர் அலுவலகம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்முக்கிய செய்திகள்வேலூர் மாவட்டம்