கேபிள் டிவி ஆபரேட்டர்களின் ஆலோசனைக் கூட்டம்.
காட்பாடியில் கேபிள் டிவி ஆபரேட்டர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது-கோரிக்கைக்கு செவிசாய்க்காவிடில் மாவட்ட தலைநகரங்களில் பெருந்திறள் போராட்டம் நடைபெறும் என கேபிள் டிவி ஆபரேட்டர்கள் எச்சரிக்கை.
வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வேலூர் காட்பாடி, கே.வி.குப்பம், பள்ளிகொண்டா, அணைக்கட்டு, பரதராமி, மேல்பட்டி, குடியாத்தம், உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கேபிள் டிவி ஆபரேட்டர்களை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் சமீபத்தில் எம் எஸ்.ஓ நிறுவனங்களான (டி.சி.சி.எல், வி.கே டிஜிட்டல், எஸ்.சி.வி ஜாக்) உள்ளிட்ட நிறுவனங்கள் கேபிள் டிவி ஆபரேட்டர்களை ஆலோசிக்காமல் திடீரென விஜய் குழுமம் தீடீர் என கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது மேலும் தங்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கப்படும் இதுபோன்ற திடீர் விலை உயர்வுகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
இந்த கோரிக்கைக்கு எம்.எஸ்.ஓக்கல் செவி சாய்க்காவிட்டால் அடுத்த கட்ட போராட்டமாக மாவட்ட தலைநகரங்கள் உள்ள ஆட்சியர் அலுவலகங்களில் கேபிள் டிவி ஆபரேட்டர்களில் பெருந்திறல் போராட்டம் நடைபெறும் என தெரிவித்தனர் இதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கேபிள் டிவி ஆபரேட்டர்கள் கலந்து கொண்டனர்