கொஞ்சம் கொஞ்சமாக மண்ணில் புதைந்து ஆபத்தான நிலையில் உள்ள குடிநீர் கிணறு குடிநீர் பற்றாகுறையால் அவதிப்படும் பொதுமக்கள் நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி?

நாகர்கோவில் மாநகராட்சி 3-வது வார்டு மேலபெருவிளை ஆற்றங்கரை பகுதியில் வீட்டு குடிநீர் இணைப்புடன் இணைக்கப்பட்ட கிணறு சில நாட்களுக்கு முன்பு அடிப்பகுதியில் உள்ள கற்கள் முழுவதும் பெயர்ந்து மண்ணுக்குள் புதைந்து மேல்பகுதி மட்டும் அந்தரத்தில் தொங்கிக்கொண்டு இருந்தது.
இதனால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
அந்த பகுதியினை பார்வையிட்ட அதிகாரிகள் உள்ளே யாரும் செல்ல வேண்டாம் என பேரிகார்டு அமைக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடு செய்தனர்.
பல நாட்கள் ஆகியும் இன்னும் அதனை சீரமைக்க
எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு.
இதனால் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. மேலும் கிணற்றை சுற்றியுள்ள பகுதியும் மண்ணுக்குள் புதைந்து வருவதால் தெரியாமல் யாரும் உள்ளே சென்று அசம்பாவிதங்கள் ஏற்படவும் அதிக வாய்ப்புள்ளது.
எனவே உடனடியாக அதனை சீரமைத்து மீண்டும் குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் வழங்கிடவும்,உயிர் சேதம் தவிர்த்திடவும் பொதுமக்கள் கோரிக்கை.
தமிழக அரசு பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் வழங்க தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் அடிப்படை வசதிகளில் மிகவும் அத்தியாவசியம் குடிநீர் .
இதற்கான பணிகளில் ஏன் மாநகராட்சி இவ்வளவு அலட்சியமாக செயல்படுகிறது என பொதுமக்கள் கேள்வி?