கொடுத்த வாக்குறுதிகள் 505…!! நிறைவேற்றியது எத்தனை? திமுகவை சாடும் சசிகலா…!!

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் வி.கே.சசிகலா நேற்றிரவு அவரது சுற்று பயணத்தை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து இன்று அரியானூர் மகுடஞ்சாவடி வழியாக சங்ககிரி பேருந்து நிறுத்தம் அருகில் தொண்டர்கள் வி.கே.சசிகலாவை மிக உற்ச்சாகத்துடன் வரவேற்றனர்.

அதனை தொடர்ந்து தொண்டர்களிடையே பேசுகையில், நமது எம்ஜிஆர், மற்றும் ஜெயலலித்த ஆகிய இருவரும் ஏழை எளிய மக்களின் நலனுக்காக சத்துணவு, தாலிக்கு தங்கம், அம்மா மருந்தகம், அம்மா உணவகம், உள்ளிட்ட திட்டங்களை கொண்டு வந்தார்கள், ஆனால் அதை அனைத்தையும் இந்த திமுக அரசு மூடுவதில் மட்டுமே குறிக்கோளாக உள்ளது.

திமுகவினர் தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக கூறுகின்றனர். ஆனால் 505 வாக்குறுதிகளில் எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளனர், என்று யாருக்கும் தெரியாது, நான் செல்லும் இடங்களில் என்னிடம் என்னை சந்திப்பவர்கள் சொல்வது என்னவென்றால்,

குடும்ப தலைவிக்கு மாதம் 1000 ரூபாய், சமையல் கேஸ் சிலிண்டர்களுக்கு 100 ரூபாய் மானியம்,நகைக்கடன் தள்ளுபடி, போன்ற வாக்குறுதிகளை நம்பித்தான் வாக்களித்தோம் ஆனால், தற்போது நாங்கள் அனைவரும் ஏமாந்து விட்டோம் என்று வேதனை தெரிவிக்கின்றனர்.

திமுக தலைமையிலான அரசு பொறுப்பெற்று கிட்டத்தட்ட 15 மாதங்கள் ஆகிவிட்டன, ஆனால் மக்களுக்கு பயனளிக்கும் எந்த ஒரு திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை, தமிழகத்தில் எந்த தரப்பினரும் நிம்மதியாக இல்லை, ஆனால் திமுகவினர் மேடைக்கு, மேடை, நாங்கள் அதை செய்து விட்டோம் இதை செய்து விட்டோம் என்று வெறும் வசனங்களை மட்டுமே பேசி வருகின்றனர்.
மேலும். கொரோனா பேரிடர் காலத்தில் இருந்து மக்கள் படிப்படியாக பொருளாதார ரீதியாக மீண்டு வரும் நிலையில், இந்த திமுகா அரசனது சொத்து வரி, மின் கட்டண, உயர்வு அத்தியாவசிய தேவையான பால், விலை உயர்வு போன்ற விலைவாசிகளை மட்டுமே உயர்த்தியுள்ளது கண்டனத்திற்குரியது. இவ்வாறு பேசினார்.
