BREAKING NEWS

கொட்டாரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா

கொட்டாரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா

கொட்டாரத்தில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் இந்திய திருநாட்டின் 79வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

சுதந்திர தின விழா கொடியேற்றத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் பான்சி ஹெப்சி பாய் அவர்கள் அனைவரையும் வரவேற்று முன்னிலை வகிக்க பள்ளி பள்ளி மேலாண்மை குழு தலைவர் ரேவதி மற்றும் உறுப்பினர்கள் பள்ளி தன்னார்வலர்கள் பெற்றோர்கள் முன்னிலையில் பள்ளி முன்னாள் மாணவர்களும் இணைந்து தேசிய கொடியை ஏற்றி சிறப்பித்தனர்.

பள்ளி மாணவ மாணவிகளின் கண் கவர் கலை நிகழ்ச்சிகளும் சிறப்புரைகளும் விழாவில் இடம் பெற்றது. மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும் இனிப்பும் பள்ளி மேலாண்மை குழுவினரால் வழங்கப்பட்டது.

விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் பள்ளி தமிழ் ஆசிரியர் நன்றி கூறினார். பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் ஆகியோர் இணைந்து விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.

முன்னதாக நடைபெற்ற மதிமுற்றம் நிகழ்ச்சியில் கன்னியாகுமரி காவல்துறை சார்பு ஆய்வாளர் எட்வர்ட் பிரைட் அவர்கள் கலந்து கொண்டு சொந்த செலவில் பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கினார்.

Share this…

CATEGORIES
TAGS