BREAKING NEWS

கொள்ளிடம் ஆற்றில் ரூ.191 கோடியில் 2-வது ஆள்துளை நீரூற்று அமைக்கும் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, சோதனை அடிப்படையில் குடிநீர் எடுக்கும் பணியை தொடங்கிவைத்தார் தஞ்சை மேயர் சண்.இராமநாதன்.

கொள்ளிடம் ஆற்றில் ரூ.191 கோடியில் 2-வது ஆள்துளை நீரூற்று அமைக்கும் பணிகள் நிறைவடைந்ததையடுத்து,  சோதனை அடிப்படையில் குடிநீர் எடுக்கும் பணியை தொடங்கிவைத்தார் தஞ்சை மேயர் சண்.இராமநாதன்.

தஞ்சை மாநகராட்சி பகுதிக்கு குடிநீர் வழங்குவதற்காக திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் ரூ.191 கோடியில் 2-வது ஆள்துளை நீரூற்று அமைக்கும் பணிகள் நிறைவடைந்ததையடுத்து,

சோதனை அடிப்படையில் குடிநீர் எடுக்கும் பணியை தொடங்கிவைத்தார் தஞ்சை மேயர் சண்.இராமநாதன். இன்னும் 30 ஆண்டுகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை என்பதே இருக்காது என்றும், தமிழ்நாட்டிலேயே 24 மணி நேரமும் குடி தண்ணீர் கிடைக்கும் முதல் மாநகராட்சியாக தஞ்சை மாநகராட்சிவிளங்கும் என பெருமிதம்…

 

 

தஞ்சை மாநகராட்சிக்கு குடி வழங்கக்கூடிய, திருமானூர் கொள்ளிடம் ஆற்று பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் 191 கோடியிலான பணிகளை இன்று பார்வையிட்டு, 2 வது ஆழ்துளை கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்கும் பணியினை சோதனை அளவில் இன்று துவக்கி வைத்தார் தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன்.. இந்நிகழ்ச்சியில் துணை மேயர் அஞ்சுகம்பூபதி, மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார், தமிழ்நாடு நீர் முதலீட்டு குழு மாவட்ட தலைவர் எழிலன், உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

 

 

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மேயர் சண்.இராமநாதன்….

 

 தஞ்சை மாநகராட்சி பகுதிக்கு கொள்ளிடம் ஆற்றில் உள்ள 1-வது ஆள்துளை நீரூற்று மூலம் 12 எம்.எல்.டி. தண்ணீர் எடுக்கப்பட்டு வினியோகிக்கப்பட்டு வருகிறது. தற்போது 2-வது நீரூற்று பணிகள் நிறைவடைந்து சோதனை செய்து பார்க்கப்பட்டது. இதில் தண்ணீர் முழு வீச்சில் வருகிறது. இதன் மூலம் 18 எம்.எல்.டி. தண்ணீர் கிடைக்கும். மின் இணைப்பு மட்டும் கிடைக்க வேண்டி உள்ளது. இன்னும் ஒரு மாதத்துக்குள் மின் இணைப்பு கிடைத்துவிடும். அதன் பின்னர் முழு வீச்சில் 2-வது நீரூற்றில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு வழங்கப்படும். இதன் மூலம் குடிநீர் பிரச்சினை இல்லை என்ற நிலை ஏற்படும்.

 

 

3-வது நீரூற்று அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் நிறைவடைந்தால் மாநகராட்சிக்கு 57 எம்.எல்.டி. தண்ணீர் கிடைக்கும். அவ்வாறு கிடைக்கும் பட்சத்தில் இன்னும் 30 ஆண்டுகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது. மேலும் தஞ்சை மாநகராட்சியுடன் 13 ஊராட்சிகளை இணைக்க உள்ளோம்.

 

அந்த பகுதிக்கும் குடிநீர் தட்டுப்பாடு இன்றி வழங்க முடியும் என்றவர் , தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் குடிநீர் வசதி கிடைக்கும் மாநகராட்சியாக தஞ்சை மாநகராட்சி விளங்கும் என்றார்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )