கோவில் கேட்டை உடைத்து உண்டியல் திருட்டு; காவல்துறையினர் மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணரை வரவழைக்கப்பட்டு விசாரணை.
அரியலூர் மாவட்டம் இராயம்புரம் கிராமத்தில் உள்ள அருள்மிகு திரௌபதி அம்மன் கோவில் கடந்த திங்கட்கிழமை தீமிதி திருவிழா நடைபெற்றது முடிந்தது.
10 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற தீமிதி திருவிழா என்பதால் சுற்று வட்டார கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் திரௌபதி அம்மன் கோவிலில் நேற்று இரவு மர்ம நபர்கள் கோவில் கேட்டை உடைத்து உள்ளே இருந்த உண்டியலை திருடி சென்றுள்ளனர்.
பிறகு செந்துறை காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணரை வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES குற்றம்
TAGS அரியலூர்அரியலூர் மாவட்டம்இராயம்புரம் கிராமம்குற்றம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்திரௌபதி அம்மன் கோவில் உண்டியல் திருட்டுமுக்கிய செய்திகள்