கோவில்பட்டி அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் பொது தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ மாணவிகளுக்கு கல்வி உபரணங்களை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே ஊத்துப்பட்டி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 2021-2022-அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற ஒன்று, இரண்டு, மூன்று, இடம் பிடித்த பள்ளி மாணவ மாணவிகளுக்கு முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ சொந்த நிதியிலிருந்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களை வழங்கி சிறப்புரை ஆற்றினார், இதனைத் தொடர்ந்து அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள புதிதாக கட்டப்படும் பால்வாடி பள்ளி கட்டடத்தை பார்வை விட்டு ஆய்வு செய்தார்.

நிகழ்ச்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜமாணிக்கம், உதவி தலைமை ஆசிரியர் பாலகணேஷ், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், ஒன்றிய செயலாளர் அய்யாதுரை பாண்டியன், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவி சத்யா, ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிச்சாமி, ஆவின் கூட்டுறவு சங்கத் தலைவர் தாமோதரன்,

ஒன்றிய விவசாய அணி செயலாளர் விஜயகுமார், மகளிர் அணி இணை செயலாளர் ராமலட்சுமி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், கிளைச் செயலாளர் அருண்குமார், ஊராட்சி மன்ற தலைவர் காளீஸ்வரி சரவணன், முன்னாள் ஒன்றிய செயலாளர் போடுசாமி, குமாரபுரம் ரவிச்சந்திரன், ஊத்துப்பட்டி ரவிக்குமார், அதிமுக நிர்வாகிகள் மனோகரன், கோபி, முருகன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
