கோவில்பட்டி அருகே கே. சிதம்பராபுரத்தில் விவசாயியிடம் 15 ஆயிரம் பணம் லஞ்சம் பெற்ற போது கிராம நிர்வாக அலுவலர் கைது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கே.சிதம்பரபுரத்தை சேர்ந்தவர் விவசாயி ராகவன். இவர் தனது நிலத்துக்கான கூட்டு பட்டாவில் இருந்து தனி பட்டா மாற்ற வேண்டும் என்று கிராம நிர்வாக அலுவலரிடம் கடந்த மூன்று மாதத்துக்கு முன்பு மனு செய்துள்ளார். கே. சிதம்பராபுரம் கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேச பெருமாள் 15,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார் .இதையடுத்து விவசாயி ராகவன் தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகார் தெரிவித்துள்ளார். புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி ஹெக்டேர் தர்மராஜ் தலைமையிலான போலீசார் வழிகாட்டுதலின்படி இன்று கே. சிதம்பராபுரம் கிராம நிர்வாக அலுவலகத்தில் வைத்து கிராம நிர்வாக அலுவலரிடம் விவசாயி ராகவன் லஞ்ச பணத்தை கொடுத்தார். அதனை கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேச பெருமாள் பெற்றுக் கொண்டபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேச பெருமாளை சுற்றி வளைத்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
