கோவில்பட்டி அருகே சுதந்திர தின விழாவை முன்னிட்டு அரசு மேல்நிலைப் பள்ளிக்கு மேளம், தாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்து பள்ளிக்கு கல்வி சீர் வழங்கிய கிராம மக்கள்.


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் உள்ள வெம்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நாட்டின் 75- ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கல்வி சீர் வழங்கும் விழா நடைபெற்றது.இவ்விழாவிற்கு,பள்ளி தலைமையாசிரியர் முத்துமாரி, கரிசல்பூமி விவசாய சங்க தலைவர் வரதராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இப்பள்ளியில் தற்போது 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில், மாணவ, மாணவிகளின் கற்கும் திறனை அறிந்த கிராம பொதுமக்கள், பள்ளி மேலாண்மை குழு சார்பில் பள்ளிக்கு ரூ.1.50,லட்சம் மதிப்பில் டேபிள், நாற்காலி,பீரோ,மின்விசிறி, மற்றும் ரொக்க பணம் உள்ளிட்டவற்றை இன்று ஊர்வலமாக கொண்டு வந்து பள்ளிக்கு வழங்கினர். அப்போது மாணவர்கள் மேளம், தாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்தனர்.

CATEGORIES தூத்துக்குடி
