கோவில்பட்டி அருகே பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நீண்ட போராட்டத்திற்கு பிறகு உடலை பெற்றுக் கொள்ள பெற்றோர் சம்மதம் பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்கள் இடம் மாணவி உடல் ஒப்படைப்பு.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் – நீண்ட நேரம் பேச்சுவார்த்தை பின்பு உடலை பெற்றுக் கொள்ள பெற்றோர் மற்றும் உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர். பின்பு உடல் பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்கள் இடம் ஒப்படைக்க பட்டது.
பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோ பதிவு செய்யபட்டது இறந்த பள்ளி மாணவியின் உடல் சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள அண்டக்குடிக்கு காவல்துறை பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது.
CATEGORIES தூத்துக்குடி