BREAKING NEWS

கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் புதிய உறுப்பினர்கள் பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்களை கடம்பூர் ராஜூ பெற்றுக் கொன்றார்.

கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் புதிய உறுப்பினர்கள் பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்களை கடம்பூர் ராஜூ பெற்றுக் கொன்றார்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தலைமையில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து அதிமுக புதிய உறுப்பினர்கள் பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்தை பெற்றுக் கொண்டு சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் பேசுகையில் வரும் ஆகஸ்ட் இருபதாம் தேதியில் மதுரையில் நடைபெறும் மாபெரும் பொதுக் கூட்டத்தில் அதிமுக கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள், தொண்டர்கள் பலரும் கலந்து கொள்ள வேண்டும் என்று பேசினார்.

இதனைத் தொடர்ந்து விளாத்திகுளம் புதூர் ஒன்றியம் வடக்கு முத்தையாபுரம் திமுக நிர்வாகிகள் ஜெயராஜ், திருமலை, ஆகியோர் திமுக கட்சியில் இருந்து விலகி முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தலைமையில் அதிமுகவின் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர்கள், நகரச் செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், வார்டு செயலாளர்கள், கிளை செயலாளர்கள்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.

CATEGORIES
TAGS