BREAKING NEWS

தமிழ்நாடு குளிர்சாதன பெட்டி பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்பநர்கள் சங்க முதல் தென் மண்டல மாநாடு நடைபெற்றது.

தமிழ்நாடு குளிர்சாதன பெட்டி பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்பநர்கள் சங்க முதல் தென் மண்டல மாநாடு நடைபெற்றது.

தமிழ்நாடு குளிரூட்டி (ஏர் கண்டிஷன்), குளிர்சாதன பெட்டி பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்பநர்கள் சங்க முதல் தென் மண்டல மாநாடு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தங்க மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

 

மாநாட்டில் கோவில்பட்டி தலைவர் சண்முகசுந்தரம் தலைமையில் மாநில தலைவர் ரவிசங்கர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி, ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர்.

 

 

கூட்டத்தில், தீர்மானங்கள் தென் மாவட்ட ஏசி தொழிலாளர்களை ஒருங்கிணைக்க வேண்டும். தமிழக அரசின் தொழிலாளர் நல வாரிய சலுகைகளை பெற்றுத்தர வேண்டும். ஒருங்கிணைக்கப்பட்ட கூலி நிர்ணயம் மற்றும் ஒருங்கிணைந்த விலைபட்டியல் ஏற்படுத்த வேண்டும்.

 

 

ஏசி தொழிலாளர்களுக்கு புதிய தொழில் நுட்ப பயிற்சிகளை வழங்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நிகழ்ச்சியில் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் வெங்கடேஷ், மாநில செயலாளர் ரமேஷ், மாநில துணை தலைவர் பப்புராஜ், மாநில பொருளாளர் ரமேஷ், மாநில துணை செயலாளர் சதாசிவம், கோவில்பட்டி பொருளாளர் முத்துக்குமார், கோவில்பட்டி செயலாளர் மணிமுத்து,

 

 

கோவில்பட்டி துணை செயலாளர் மாரியப்பன், கோவில்பட்டி முன்னாள் செயலாளர் ராஜேஷ், மற்றும் அதிமுக ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிச்சாமி, அதிமுக நகர மன்ற உறுப்பினர் கவியரசன், ஒன்றிய கவுன்சிலர் இந்திரன், முன்னாள் நகர மன்ற உறுப்பினர் பொன் ஸ்ரீராம், முன்னாள் ஒன்றிய செயலாளர் போடு சாமி, பழனி குமார்,

 

 

திமுக நகர மாணவரணி செயலாளர் மகேந்திரன், உள்ளிட்ட சிவகங்கை, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.

CATEGORIES
TAGS