கோவில்பட்டியில் தென் மண்டல அளவிலான யோகா போட்டியில் வெற்றி மாணவ மாணவிகளுக்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பரிசுகள் வழங்கினார்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.
மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி கோவில்பட்டியில் தென் மண்டல அளவிலான யோகா போட்டியில் வெற்றி மாணவ மாணவிகளுக்கு முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு பரிசுகள் வழங்கினார்.
மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பகத்சிங் இரத்ததான கழக அறக்கட்டளை, அம்மா அப்பா கல்வி மற்றும் பண்பாட்டு அறக்கட்டளை, பிலிப்ஸ் ஸ்போர்ட்ஸ் கழகம், அசோகா விளையாட்டு கழகம் சார்பில் தென் மண்டல அளவிலான யோகா போட்டி நடைபெற்றது.ஏ.வி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் நீலமோகன்,
பகத்சிங் ரத்ததான கழக தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் பள்ளி செயலாளர் சுப்பிரமணியன் முன்னணியில் யோகா போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் அய்யாதுரை பாண்டியன், அன்புராஜ், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிசாமி, ஆவின் கூட்டுறவு சங்கத் தலைவர் தாமோதரன், நகர்மன்ற உறுப்பினர்கள் கவியரசன், வள்ளியம்மாள் மாரியப்பன், அப்பா அம்மா கல்வி மற்றும் பண்பாட்டு அறக்கட்டளை சண்முகசுந்தரம்,
அரசு மருத்துவர் திருமுருகன், புத்துயிர் ரத்ததான கழக செயலாளர் தமிழரசன், பகத்சிங் ரத்ததான கழக அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ், செயலாளர் சண்முகராஜா, பொருளாளர் மணிகண்டன், வேலுச்சாமி, அழகேசராஜா, நாகராஜ், வேல்முருகன், முன்னாள் ஒன்றிய செயலாளர் போடுசாமி, மேல ஈரால் கிளைச் செயலாளர் பொன்ராஜ், அதிமுக நிர்வாகிகள் ராமமூர்த்தி, அழகர்சாமி, கோபி பழனி குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது பள்ளி வளாகத்தில், ஏ.வி.மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1982-83-ம் கல்வியாண்டில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ வருகையை அறிந்த, முன்னாள் மாணவர்கள் நேரில் வந்து, அவரை தங்கள் நிகழ்ச்சிக்கு வந்து வாழ்த்துரை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
இதையடுத்து முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ, அவர்களை சந்தித்து வாழ்த்தி பேசி,ஆசிரியர்களை கௌரவித்தார்.