BREAKING NEWS

கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூவின் 63வது பிறந்த நாள் விழா – தொண்டர்கள் நிர்வாகிகள் உடன் கேக் வெட்டி கொண்டாட்டம்….

கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூவின் 63வது பிறந்த நாள் விழா – தொண்டர்கள் நிர்வாகிகள் உடன் கேக் வெட்டி கொண்டாட்டம்….

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஸ்ரீ ஆயிரத்தெண் விநாயகர் திருக்கோவிலில் கடந்த மாதம் 3.07.2022 மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று 48ம் நாள் மண்டல பூஜை நடைபெற்றது.நிகழ்ச்சியில் இன்று 63 வது பிறந்த நாளை காணும் முன்னால் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். இதனைத் தொடர்ந்து
கோவில்பட்டி சட்டமன்ற அலுவலகத்தில் வைத்து முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூவின் 63 வது பிறந்த நாளை முன்னிட்டு தொண்டர்கள் நிர்வாகிகள் அவரை நேரில் சந்தித்து மாலை அணிவித்தும் பூங்கோத்து கொடுத்தும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர் பின்னர் தொண்டர்கள் மத்தியில் கேக் வெட்டி கொண்டாடினர். முன்னதாக சட்டமன்ற அலுவலகத்தில் இருந்து பேரணியாக சென்று புது ரோடு சாலையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா,
எம் ஜி.ஆர்,ஜெயலலிதா உள்ளிட்டோர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னதாக கோவில்பட்டி யாதவர் மகா சங்கம் சங்கம் சார்பில் 29 ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு ஸ்ரீ பெருமாள் கோவிலில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்,

முன்னாள் முதல்வர் தொலைபேசி வாயிலாக கடம்பூர் ராஜூக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இன்று பிறந்தநாள் காணும் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூக்கு முன்னாள் முதல்வர் எதிர்க்கட்சி சட்டமன்ற தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தொலைபேசி வாயிலாக கடம்பூர் ராஜூக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.


இந்நிகழ்வில் பொதுக் குழு உறுப்பினர் ராமச்சந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சின்னப்பன்,மோகன், மாவட்ட ஊராட்சி குழு தலைவி சத்யா, நகரச் செயலாளர் விஜய பாண்டியன், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிச்சாமி, ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன்,ஒன்றிய செயலாளர்கள் அய்யாதுரை பாண்டியன், அன்புராஜ்,வண்டானம், கருப்பசாமி,நகர மன்ற உறுப்பினர்கள், கவியரன், செண்பக மூர்த்தி, வள்ளியம்மாள் மாரியப்பன், மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் சிவபெருமான், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் நீலகண்டன், அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் சாமிராஜ்,வழக்கறிஞர் அணி சங்கர்கணேஷ்,முன்னாள் ஒன்றிய செயலாளர் போடு சாமி,மேல ஈரால் கிளைச் செயலாளர் பொன்ராஜ்,முன்னாள் நகர பொருளாளர் வேல்முருகன்,நகரப் பிரதிநிதி மகேஷ் பாலா, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நகரத் தலைவர் ராஜகோபால், நகர செயலாளர் மூர்த்தி, உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் அழகர்சாமி, மனோகரன், பழனிகுமார்,கோபி, முருகன், பழனி முருகன்,குழந்தை ராஜ், ஜெய் சிங்,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )