BREAKING NEWS

கோவையில் இருந்து மதுரை நோக்கி சென்ற அரசு பேருந்தில் நடத்துனர் திடீர் மயக்கம்-பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி.

கோவையில் இருந்து மதுரை நோக்கி சென்ற அரசு பேருந்தில் நடத்துனர் திடீர் மயக்கம்-பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி.

கோவையில் மதுரை நோக்கி சென்ற அரசு பேருந்தில் நடத்துனர் திடீர் மயக்கம்.

கோவையில் இருந்து 25 பயணிகளுடன் மதுரை நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்து மதுரை செல்லும் வழியில் பல்லடம் பேருந்து நிலையத்திற்குள் பயணிகளை இறக்கிவிட்டு மேலும் சில பயணிகளை ஏற்றுக் கொண்டும் நின்றிருந்தது. அந்தப் பேருந்தை மதுரையைச் சேர்ந்த ராமராஜ் என்பவர் ஓட்டி வந்துள்ளார்.

 

 

நடத்துனர் சீனி 51 பயணிகளுக்கு பயணச்சீட்டை வழங்கிக் கொண்டிருந்த நிலையில் திடீரென மயங்கி பேருந்தினுள் சுருண்டு விழுந்துவிட்டார். இதையடுத்து ஓட்டுனர் ராமராஜ் பேருந்தை பல்லடம் அரசு மருத்துவமனைக்கு பயணிகளுடன் கொண்டு சென்றார்.அங்கு நடத்துனர் சீனிக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

 

 

சிகிச்சைக்கு பின்னர் நடத்துனர் சீனியை கோவை அரசு மருத்துவ மனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.பல்லடத்தில் இன்று மாலை கோவையில் இருந்து மதுரை நோக்கி சென்று அரசு பேருந்தின் நடத்துனர் மதுரை சேர்ந்த சீனி என்பவர் திடீரென மயங்கி சுருண்டு விழுந்ததாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

CATEGORIES
TAGS