BREAKING NEWS

சங்ககிரியில் ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட பணிகள் எம்பி தொடங்கி வைத்தார்.

சங்ககிரியில் ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட பணிகள் எம்பி தொடங்கி வைத்தார்.

சேலம் மாவட்டம், சங்ககிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 12 லட்சம் மதிப்பில் சமையல் கூடம் அமைப்பதற்கான பணிகளை சின்ராஜ் எம்பி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து வடுகப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ. 20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சுற்றுச் சுவரை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

அப்போது அவர், வட்டார மருத்துவ அலுவலர் வைத்தீஸ்வரனிடம் மருத்துவ மனையில் பொதுமக்களுக்கு அளிக்க கூடிய சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.

இந்நிகழ்ச்சியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சேலம் தெற்கு மாவட்ட செயலாளர், திமுக ஒன்றிய செயலாளர், பேரூர் கழகச் செயலாளர், செயல் அலுவலர், மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS