சங்கரன்கோவிலில் தமுஎகச சார்பில் காந்தி பிறந்த நாள் விழா மற்றும் காமராஜர் நினைவு நாள் அனுசரிப்பு

சங்கரன்கோவில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் மகாத்மா காந்தியின் 157 வது பிறந்தநாள் விழா மற்றும் பெருந்தலைவர் காமராஜரின் 51 ஆவது நினைவு நாள் அனுசரிப்பு நடைபெற்றது.
இதையொட்டி சுவாமி சன்னதியில் உள்ள மகாத்மா காந்தியின் உருவ சிலைக்கும், பெருந்தலைவர் காமராஜர் உருவப்படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.பின்னர் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாவட்டத் தலைவர் மதியழகன், நகர தலைவர் மு.செல்வின், செயலர் ப.தண்டபாணி, மாவட்ட துணைத் தலைவர் மு.ஈஸ்வரமூர்த்தி, மாவட்ட துணைச் செயலர் ந.செந்தில்வேல், மாவட்டக்குழு உறுப்பினர் அ.திருவள்ளுவர், சசிகுமார், சங்கரமகாலிங்கம், சங்கரநாராணன்,
முனைவர் வே. சங்கர்ராம், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துப்பாண்டியன், திமுக முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் சோம.செல்வப்பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.