சங்கரன்கோவில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் கலைத் திருவிழா.!
தென்காசி செய்தியாளர் கிருஷ்ணகுமார்.
தென்காசி மாவட்டம்,
தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறையின் சார்பில் தமிழ்நாட்டின் பாரம்பரிய கலைகளை மாணவர்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் கலைத் திருவிழா என்ற பெயரில் மாநிலம் முழுவதும் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு கலைப் போட்டிகளும் மொழித்திறன் போட்டிகளும் நடத்தி வருகிறது.
அதன் ஒரு கட்டமாக சங்கரன்கோவில் வட்டாரத்தில் பள்ளி அளவிலான போட்டிகள் முடிந்து வட்டார அளவிலான போட்டிகள் இன்று முதல் (29.11.2022) தொடங்குகிறது.
வட்டார அளவிலான போட்டிகள் துவக்கவிழா நிகழ்ச்சி சங்கரன்கோவில் காந்திநகர் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் வைத்து நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஈ.ராஜா அவர்கள் தலைமை தாங்கி தொடங்கி வைத்து கருத்துரை வழங்கினார்.
வட்டார கல்வி அலுவலர்கள் செல்வ பாக்கிய சாந்தினி மற்றும் அந்தோணி ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வள மைய மேற்பார்வையாளர் முத்துசெல்வி வரவேற்றார்.
சங்கரன்கோவில் ஒன்றிய பெருந்தலைவர் லாலா (எ) சங்கர பாண்டியன் மற்றும் சங்கரன்கோவில் நகர்மன்ற தலைவி உமா மகேஸ்வரி சரவணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
ஆசிரியர் பயிற்றுநர் ஆனந்தராஜ் பாக்கியம் நன்றியுரை வழங்கினார். ஆசிரியர் பயிற்றுநர் காந்தி தொகுத்து வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட கழக பொருளாளர் சங்கை சரவணன், மாவட்ட துணைச் செயலாளர் புனிதா, நகர செயலாளர் பிரகாஷ், ஒன்றிய செயலாளர்கள் சேர்மத்துரை, பெரியதுரை,
மாவட்ட துணை அமைப்பாளர்கள் இளைஞர் அணி சரவணன், மாணவர் அணி ராயல் கார்த்திக், உதயகுமார், அப்பாஸ் அலி, மாவட்ட பிரதிநிதி முத்துக்குமார், நகர துணைச்செயலாளர் சுப்புத்தாய், நகர நிர்வாகிகள் அஜய் மகேஷ் குமார்,
வழக்கறிஞர் சதீஷ், ஜெயக்குமார், கேபிள்கணேசன், ராஜவேல், KSS.சங்கர், சுப்புராஜ், ஜெயராணி, ஜான்சன். பில்லா கணேஷ் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் சைமன், ஜமுனாராணி, சகிலா, மங்கையர்கரசி, சண்முகவடிவு, கங்காதேவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சங்கரன்கோவில் வட்டார கல்வித்துறையினர் செய்திருந்தனர்.