சமூக வலைதளங்களால் அனைவருக்கும் கவன சிதறல்கள் ஏற்படுகிறது நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ் பேச்சு:

மாணவர்கள் பட்டம் பெற்றால் மட்டும் போதாது, கற்ற கல்வியை அறிவாற்றலோடு வெளிப்படுத்திட வேண்டும் தஞ்சை வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைகழகத்தில்
30 வது பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மாணவர்களுக்கு அறிவுரை :

தஞ்சை வல்லம் பெரியார் மணியம்மை பல்கலை கழகத்தில் இன்று 30 வது பட்டமளிப்பு விழா பல்கலைகழக வேந்தர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்றது
விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று 1,162 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய
சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் என். ஆனந்த் வெங்கடேஷ் மாணவர்களிடத்தில் பேசுகையில்,
மாணவர்கள் படித்து பட்டம் பெற்றால் மட்டும் போதாது, கல்வியால் அறிவை வளர்த்துக்கொண்டு அறிவாற்றலை வெளிப்படுத்திட வேண்டும் என்றவர்
செல்போனால், சமூக வலைதளங்கலால் கவனச்சிதறல்கள் அதிகமாக ஏற்படுகிறது, படிப்பு பாதிக்கப்படுகிறது என்றவர்
தந்தை பெரியார் இந்தியாவில் பிறக்காமல் வெளிநாடுகளில் பிறந்திருந்தால் சாக்ரடீஸ் என்றே அழைத்துருப்பார்கள் என்று புகழாரம் சூட்டினார்
