சம்பா சாகுபடிக்கான பயிர்க் காப்பீட்டுக்கான காலத்தை ஒன்றிய அரசு விரைவாக நீட்டித்து அறிவிக்க வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தினர்.
தஞ்சை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட சம்பா இளம் பயிர்களை பிழைக்க வைக்க தேவையான யூரியா, பொட்டாஷ் உரம் கிடைக்கவில்லை மாவட்ட நிர்வாகம் உடனடியாக உரத்தட்டுப்பாட்டை போக்க வேண்டும்,
மேலும் மழை நீடிக்கும் என்பதால் சம்பா சாகுபடிக்கான பயிர்க் காப்பீட்டுக்கான காலத்தை ஒன்றிய அரசு விரைவாக நீட்டித்து அறிவிக்க வேண்டும் என்றும் தஞ்சையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் முறையீடு:
தஞ்சை கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் ரஞ்சித் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில், வேளாண்துறை பொதுப்பணித்துறை, நுகர்பொருள் வாணிப கழகம் உள்ளிட்ட அலுவலர்களும், ஏராளமான விவசாயிகளும் பங்கேற்ற கூட்டத்தில் பேசிய விவசாயிகள்,
மழைநீரில் மூழ்கியதால் பாதிக்கப்பட்ட சம்பா இளம் பயிர்களை உயர்பிக்க யூரியா, பொட்டாஷ் உரங்கள் உடனடியாக தேவை, தாமதமானால் மகசூல் பெருமளவு பாதிக்கும் என்பதால் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் உரத் தட்டுப்பாட்டை போக்கிட வேண்டும் என்றும்,..
தஞ்சை மாவட்டத்தில் மேலும் மழை பெய்யும் என்பதால் சம்பா சாகுபடிக்கான பயிர்க் காப்பீட்டுக்கான காலத்தை ஒன்றிய அரசு தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று நீட்டித்து அறிவிக்கவேண்டும் என்றும், கரும்புக்கான நிலுவைத் தொகையை தமிழக அரசு உடனடியாக வழங்கிட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.