BREAKING NEWS

சம்பா சாகுபடிக்கான பயிர் காப்பீடுக்கான காலக்கெடுவை இன்னும் 10 நாட்களுக்காவது நீட்டிக்க வேண்டும்; தஞ்சை டெல்டா விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சம்பா சாகுபடிக்கான பயிர் காப்பீடுக்கான காலக்கெடுவை இன்னும் 10 நாட்களுக்காவது நீட்டிக்க வேண்டும்; தஞ்சை டெல்டா விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் இதுவரை பெரும்பாலான விவசாயிகள் சம்பா சாகுபடிக்கான பயிர் காப்பீடு செய்யாத நிலையில்,

 

காப்பீடுக்கான காலக்கெடுவை இன்னும் 10 நாட்களுக்காவது நீட்டிக்க வேண்டும் என்று தஞ்சை டெல்டா விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பு சம்பா மற்றும் தாளடி பருவத்தில் பயிர் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்திட தஞ்சாவூருக்கு ரிலையன்ஸ் பொது காப்பீடு நிறுவனமும், தஞ்சாவூர் அக்ரிகல்சுரல் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனம் அங்கீகரிக்கப்பட்டு உள்ளது.

 

 

2022-ஆம் ஆண்டில், சம்பா மற்றும் தாளடி பருவத்தில் நெல் பயிருக்கு காப்பீடு செய்திட தஞ்சாவூர் மாவட்டத்தில் 891 வருவாய் கிராமங்கள் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன.

 

 

இத்திட்டத்தின் கீழ் கடன் பெறும் விவசாயிகள், அவர்கள் கடன் பெறும் வங்கிகளில் விருப்பத்தின் பெயரில் பயிர்க் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

 

 

கடன் பெறும் மற்றும் கடன் பெறா விவசாயிகள் அனைவரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாகவோ, அல்லது பொது சேவை மையங்கள் மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம்.

 

 

நெல் சம்பா மற்றும் தாளடி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்து கொள்ள இன்று கடைசி நாளாகும்.

 

 

நெல் சம்பா மற்றும் தாளடி பயிருக்கு விவசாயிகள் ஏக்கருக்கு ரூ.539/- பிரீமியமாக செலுத்தி ரூ.35,900-க்கு காப்பீடு செய்து கொள்ளலாம்.

 

 

இந்நிலையில் பயிர் காப்பீடு செய்ய இன்று கடைசி நாள் என்பதால், காப்பீடு செய்யும் நாளை நீட்டிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

மேலும் கடந்த காலங்களில் தொடர் மழை, பல்வேறு கிராமங்களில் சேவை மையம் இல்லாது போன்ற நெருக்கடிகளில் விவசாயிகள் சிக்கி உள்ளதாகவும்,

 

 

எனவே விவசாயிகளாக நலன் கருதி வரும் காப்பீட்டு பதிவு செய்வதற்கான நாளை இன்னும் 10 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )