சி ஏ ஏ வை அமல்படுத்திய மத்திய அரசை கண்டித்து ஈரோட்டில் எஸ்டிபிஐ கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சி ஏ ஏ வை அமல்படுத்திய மத்திய அரசை கண்டித்து ஈரோட்டில் எஸ்டிபிஐ கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்..
அண்மையில் சி ஏ ஏ எனும் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தியது.
இக்குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் மூலம் மதச்சார்பின்மை சிதைக்கப்படுவதாகவும் மதத்தின் பெயரால் மக்கள் பிளவு படுத்தப்படுவதாகவும் அரசியல் கட்சியினர் இச்சட்டத்தை நிறைவேற்றிய மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று ஈரோடு காந்தி சிலை அருகே எஸ் டி பி ஐ கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எஸ் டி பி ஐ கட்சியின் மாவட்ட செயலாளர் லுக்மானுள் அக்கீம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன..இதில் குழந்தைகள் பெண்கள் உட்பட 100 மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.