சினிமா பாணியில் சம்பவம் .. பணம் வழிப்பறி செய்து தப்பி ஓடிய திருடன்.. பாய்ந்து பிடித்த காவலர்.

மதுரையில் பூ விற்கும் பெண்ணிடம் பணத்தை பறித்துச் சென்றவர்களை, போலீசார் பாய்ந்து பிடித்த காட்சிகள், சி.சி.டிவி.யில் பதிவாகியுள்ளன.
ரயில் நிலையம் எதிரே டவுன் ஹால் ரோடு பகுதியில் சாலையோரமாக பூ விற்ற பெண்ணிடம் இருந்த பணப்பையை , இரு இளைஞர்கள் பறித்துச் சென்று தப்பியோடினர்.
அப்பெண் கூச்சலிட்டதை கண்ட , ரோந்துப் பணியில் இருந்த திடீர் நகர் காவல்நிலைய ஆய்வாளர் காசிராஜன், தலைமை காவலர் முத்துப்பாண்டி ஆகியோர் தங்களது காரில் விரட்டிச்சென்று, சாலையில் பாய்ந்து பிடித்தனர் . பணத்தை மீட்ட போலீசார் , இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர் .
CATEGORIES மதுரை