சின்கோனா முதல் பிரிவின் டான் டீ இளைஞர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கோயம்புத்தூர், சின்கோனா முதல் பிரிவின் டான் டீ இளைஞர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் சின்கோனா முதல் பிரிவில் டான்டீ இளைஞர்கள் தலைமையில் டான்டீ மக்களின் அடிப்படை உரிமைகள் கோரிக்கை ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் தமிழக மாண்புமிகுமுதல்வர் அறிவித்து அரசனை வெளியிட்ட ரூ 434 அமல்படுத்தவும், வருகிற தீபாவளிபோணஸ் இருபதி சதவிகிதமாக தொழிலாளர்களுக்கு வழங்கிடவும்,
தொழிலாளர்களுக்கான பணப்பலன்கள், நிலுவை தொகைகளை உடனடியாக வழங்கிடவும், டான்டீ தேயிலை தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை வசதிகள் உடனடியாக செய்து தரக்கோரியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு அந்த தீர்மானங்களை தமிழக அரசுக்கும்,
மாண்புமிகு முதல்வரின் கவணத்திற்க்கு கொண்டு செல்லும் வகையில் கவண ஈர்ப்பு ஆர்பாட்டம் சின்கோனா மேலாளர் அலுவலகம் முன்பு நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக தோழர் CITU பரமசிவம் அவர்களும், வால்பாறை மக்கள் இயக்க நிர்வாகிகள் ஆண்ட்ரூஸ், லோகேஸ், மனோஜ், செய்யது அலி அவர்களும் கலந்து கொண்டு தங்களது ஆலோசனைகளை வழங்கினர்.
கூட்டத்தினை டான்டீ இளைஞர்கள் ஜிம் மணி ,ஜெபக்குமார்,செந்தில்,சந்தோஷ் ஆகியோர் ஒருங்கினைத்தனர்.
