சிலமாதங்களில் உதிர்ந்த நிழற்குடை: ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா?

ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டி நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் திறந்து வைத்த பயணியர் நிழற்கூடம் இரண்டாவது முறையாக மேற்கூரை சிமெண்ட் பூச்சிகள் பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சீவூர் பஞ்சாயத்து உட்பட்ட சித்தூர்கேட் பகுதியில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.11லட்சம் மதிப்பீட்டில் புதியதாக பயணியர் நிழற்கூடம் கட்டி கொடுக்கப்பட்டது.
கடந்த ஏப்ரல் மாதம் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
பின்னர் இரண்டு நாளில் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்த நிலையில் இருவோடு இரவாக ஒப்பந்ததாரர்கள் மேற்கூரையை சீரமைத்தனர்.
இந்த நிலையில் இன்று அதே பயணியர் கூட்டத்தில் இரண்டாவது முறையாக மேற்கூரை சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்தது. அந்த நேரத்தில் பயனியர் நிழற்கூடத்தில் பயணிகள் யாரும் இல்லாததால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
ஆளும் கட்சியைச் சார்ந்த ஒப்பந்ததாரரின் தரமற்ற கட்டுமானத்தால் இப்படி மட்டமான நிழற்குடை கட்டப்பட்டிருப்பதாகவும், அவர் மீது ஆட்சித்தலைவர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோருகின்றனர்.