சிவகங்கை, திருப்புவனம் அருகேயுள்ள சங்கம் குளத்தில் ஸ்ரீ வன்னிய அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள சங்கம் குளத்தில் ஸ்ரீ வன்னிய அய்யனார் கோவில் அமைந்துள்ளது. இங்கு வருடம் தோரும் சிறப்பாக வருடாபிஷேக விழா நடைபெற்று வருகிறது. இந்த வருடம் வருடாபிஷேகம் மிக சிறப்பாக நடைபெற்றது.

இந்த வருடாபிஷேக யாகத்தில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பெண்கள் பக்தர்கள் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் பொதுமக்கள் கலந்து ஸ்ரீ வன்னிய அய்யனாரை வழிபாடு செய்தனர்.
இந்த வருடாபிஷேக யாக நிகழ்ச்சில் ஊராட்சி மன்ற தலைவர் சங்கையா திமுக கவுன்சிலர் ஈஸ்வரன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஏ கருப்பையா இவர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.

சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இங்கு வரும் பக்தர்களுக்கு கோவில் சார்பாக சிறப்பான முறையில் அன்னதானம் வழங்கபட்டது.
CATEGORIES சிவகங்கை
