சிவகங்கை நகர்மன்ற தலைவர் 3 மெட்ரிக் டன் மக்காத எரியக்கூடிய கழிவுகளை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.

செய்தியாளர் வி.ராஜா.
சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளில் தினமும் சேகரமாகும் 12 மெட்ரிக் டன் குப்பையில் 6.5 மெட்ரிக் டன் மக்கும் குப்பைகள் உரமாக்கப்படுகின்றன.
அதில் 3 மெட்ரிக் டன் மக்காத எரியக்கூடிய கழிவுகளை சிமிண்ட் ஆலைக்கு நகர் மன்றத் தலைவர் திரு. சி.எம் துரை ஆனந்த் அவர்களின் மூலம் பணியாளர்களைக் கொண்டு லாரிகள் மூலம் ஏற்றி உலர் குப்பைகளை 40 மெட்ரிக்டன் அரியலூருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வின் போது நகர் மன்ற உறுப்பினர்கள், துப்புரவு அலுவலர் திரு,ஜெயபால்மூர்த்தி, துப்புரவு ஆய்வர் திரு.திண்ணாயிரமூர்த்தி, மற்றும் தூய்மை பாரத மேற்பார்வையாளர்கள் திரு.குருநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
CATEGORIES சிவகங்கை
