சிவகங்கையில்,16 வருடங்களுக்கு பிறகு நடந்த புரவி எடுப்பு திருவிழா.

16 வருடங்களுக்கு பிறகு நடந்த புரவி எடுப்பு திருவிழா… சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, காட்டூரணி, இளங்காருடைய அய்யனார் கோaவில் புரவி எடுப்பு விழா. வெகு விமர்சையாக நடைபெற்றது.
16 வருடங்களுக்கு பிறகு நடைபெறும் இந்த விழாவில் நத்தபுரக்கி கம்மாபட்டி வலசை என மூன்று கிராமங்கள் சேர்ந்து கோலாகலமாக விழாவை கொண்டாடினர்.
தற்போது மானாமதுரையில் இருந்து பக்தர்கள் குதிரையை தோளில் சுமந்து கொண்டு நடைபயணமாக கிராமத்துக்கு கொண்டு சென்றனர்.
இதில் சுற்று வட்டார கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு அய்யனார் அருள் பெற்றுச் சென்றனர்.
மிகவும் சக்தி வாய்ந்த இந்த கோவிலில் திருமணத்தடை நீங்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதால் மண்ணால் செய்யப்பட்ட குதிரைகள், காளைமாடுகள், குழந்தை பொம்மைகள் சிலைகளை எடுத்துவந்து நேர்த்திக்கடனாக அய்யனார் கோவிலில் செலுத்தி வழிபட்டனர்.
இதனால் கிராம பொதுமக்களும் கடவுளின் அருள் பெற்று ஒரு வாரத்திற்கு மேலாக விரதம் இருந்து தங்களது நேத்தி கடனை செலுத்தினர் அவர்களுக்கு தேவையான குதிரைகளும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பொம்மை வடிவமைத்து தோளில் தூக்கி செல்வார்கள்.
இதன் மூலம் இவ்விழாவின் மழை வேண்டியும் விவசாயம் செழிக்கவும், ஊர் மக்கள், நாட்டு மக்கள் நலனுக்காகவும் புரவி எடுப்பு திருவிழா என பெயர் பெற்று மானாமதுரை மிகவும் சிறந்து விளங்கி கொண்டிருக்கிறது.