BREAKING NEWS

சுமைப்பணி தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

சுமைப்பணி தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

திருச்சி மாவட்ட சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று நடைபெற்றது.

 

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி மாவட்ட சுமைப்பணி தொழிலாளர் செயலாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார். சி ஐ டி யு மாவட்ட தலைவர் ரெங்கராஜன் மற்றும் மாநில பொதுச் செயலாளர் அருள்குமார் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்கள்.

 

இந்த ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளாக சுமைப்பணி தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க கோரியும், தொழிலாளர் நலவாரிய பலன்களை இரட்டிப்பாக்க கோரியும், ILO ஒப்பந்தப்படி 100 கிலோ மூட்டைகளை தடை செய்ய கோரியும்,

 

நகர்புற வீட்டு வசதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அடுக்கு மாடி குடியிருப்புகளில் சுமைப்பணி தொழிலாளிக்கு வீடு வழங்க கோருவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )