செங்கத்தில் அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு அணி துறை ஓய்வு ஊதியர்கள் சங்கம் சார்பில் கடந்த ஜூன் மாதம் 12ஆம் தேதி நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில்,
சத்துணவு அங்கன்வாடி உள்ளாட்சி எழுத்தர் ஊராட்சி உதவியாளர்கள் வருவாய் கிராம ஊழியர்கள் வன காவலர்கள் தோட்டை கலா காவலர்கள் நெடுஞ்சாலை மற்றும் பட்டு வளர்ச்சி துறையின் என அனைத்து துறை ஓய்வு பெற்ற ஊழியர்கள் தமிழக முதல்வர் தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல்,
அனைவருக்கும் மதம்தோறும் குறைந்துபட்ச ஓய்வூதியமாக ரூபாய் 7850 வழங்க கோரி ஓய்வு பெற்ற மாவட்ட வருவாய் அலுவலர் சண்முகம் தலைமையில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக செயல்படுத்தி அனைத்து அரசு துறை ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் எனக் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.