செங்கத்தில் மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் 50-க்கும் மேற்பட்டோர் கைது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் அத்தியாவசிய பொருள் விலை உயர்வை கட்டுப்படுத்து பெட்ரோல் டீசல் கேஸ் விலை மீதான வரியை முழுமையாக ரத்து செய்யவும் படித்து முடித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடவும்,
2022 மின்சார திருத்த மசோதாவை திரும்ப பெற கூறும் 100 நாள் வேலை திட்டத்தை பேரூராட்சி பொதுமக்களுக்கும் வழங்கிட வேண்டுமென உட்பட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் 50க்கும் மேற்பட்டோர் மத்திய மாநில அரசுகளை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர் மறியல் ஈடுபட்டவர் காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர்.
CATEGORIES திருவண்ணாமலை