செங்கம் அடுத்த நீப்பத்துறை சென்னியம்மன் கோவில் ஆடிப்பெருக்கு விழா ஆற்றில் இறங்க பக்தர்களுக்கு தடை.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த நீப்பத்துறை சென்னியம்மன் ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆடி மாதம் 18ஆம் தேதி ஆடிப்பெருக்கு திருவிழாவில் ஆற்றின் நடுவில் உள்ள சென்னியம்மன் பாறைக்கு சென்று தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தி வழிபட்டு வந்த நிலையில் தற்போது ஒகேனக்கல் உட்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருவதால்,
கிருஷ்ணகிரி கே ஆர் பி அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளவு எட்டும் நிலையில் உள்ளதால் அணையின் பாதுகாப்பு கருதி நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டதால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி ஆற்றின் நடுவில் உள்ள சென்னியம்மன் பாறையை சென்று வணங்கவும் குளிக்கவும் கோயில் நிர்வாகம் பக்தர்களுக்கு தடை விதித்துள்ளது.
CATEGORIES திருவண்ணாமலை