BREAKING NEWS

செங்கம் அருகே அரசு பேருந்தும் டேங்கர் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்தில் 7 பேர் படுகாயம் 20 மேற்பட்டோர் காயம்.

செங்கம் அருகே அரசு பேருந்தும் டேங்கர் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்தில் 7 பேர் படுகாயம் 20 மேற்பட்டோர் காயம்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த அரசங்கன்னி வன பகுதியில் அருகே திருவண்ணாமலையிலிருந்து திருப்பத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தும் திருச்செங்கோட்டில் இருந்து சாத்தனூர் சக்கர ஆளுக்கு சென்று கொண்டிருந்த டேங்கர் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில்,..

 

 

பேருந்து ஓட்டுனர் மற்றும் லாரிஓட்டுநர் உள்பட ஏழு பேர் உயிருக்கு ஆபத்தான நிலையிலும், 20க்கும் மேற்பட்டோர் லேசான காயமடைந்த நிலையில் தகவல் அறிந்து விரைந்து வந்த காவல் மற்றும் தீயணைப்பு துறையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு 108 வாகனம் மூலம் செங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

 

 

பின்னர் விபத்து குறித்து மேல் செங்கம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

CATEGORIES
TAGS