செங்கம் அருகே சூதாட்ட வந்தவர் திடீர் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக உறவினர்கள் சாலை மறியல்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த சாத்தனூர் பகுதியில் மோகன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் சூதாட்டம் விளையாடி வந்த நிலையில் முத்தனூர் பகுதியைச் சேர்ந்த முனுசாமி மகன் வெங்கடேஷ் என்பவர் வழக்கம்போல் சூதாட சாத்தனூர் வந்துள்ளார் மாலை 5 மணி அளவில் வெங்கடேசன் மாரடைப்பால் உயிரிழந்ததாக அவரது உறவினருக்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுத்துள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த உறவினர்கள் வெங்கடேசனின் மரண தங்களுக்கு சந்தேகம் உள்ளதாகவும் மருத்துவமனை 500 மீட்டர் தொலைவில் உள்ள நிலையில் மாரடைப்பு வந்த வெங்கடேசனை மருத்துவமனையில் அனுமதிக்காமல் உடன் விளையாடியவர்கள் ஓடிவிட்டதை அடுத்து அவர்கள் மீது தங்களுக்கு சந்தேகம் உள்ளதாகவும் அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என சாத்தனூர் டு திருவண்ணாமலை சாலையில் சாலை மறியல் ஈடுபட்டதால் சுமார் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
என்ன தகவல் அறிந்து வந்த செங்கம் காவல் துணை கண்காணிப்பாளர் சின்னராஜ் மற்றும் ஆய்வாளர் செல்வராஜ் வெங்கடேசனின் உடலை கைப்பற்றி திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வீட்டின் உரிமையாளர் மோகனை கைது செய்து அவரிடமிருந்து நான்கு செல்ஃபோன் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆன்லைன் சூதாட்டத்தில் தற்கொலைகள் நிகழ்ந்து வரும் சூழலில் சூதாட்டத்தில் திடீரென மரணம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.