செங்கல்பட்டில் தமிழ்நாடு வீட்டு வசதிவாரிய கட்டிட பணியை அமைச்சர் முத்துசாமி பார்வையிட்டார்..

செங்கை ஷங்கர்,செங்கல்பட்டு.
செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடி அருகே இரண்டரை ஏக்கர் பரப்பளவில் 25கோடியே 43 லட்சத்து 20 971 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில்
எல்.ஐ.ஜி பிரிவில் 26 அறைகளும் எம்.ஐ.ஜி பிரிவில் 90 அறைகளும் கூடிய 116 அறைகள் கொண்ட 13 தளங்கள் மற்றும் 15 தளங்கள் என இரண்டு பிரிவுகளாக தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் சார்பில் புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.

இந்த புதிய கட்டிடத்தின் கட்டிடப்பணிகளை தமிழக வீட்டுவசதி மற்றும் சமூகநலத்துறை அமைச்சர் முத்துசாமி நேரில் சென்று பார்வையிட்டார்.
பார்வையிட்டபின் பேசிய அமைச்சர் இந்த கட்டிடம் 80 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில் வருகிற மார்ச் மாத இறுதிக்குள் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிட்டிருப்பதாகவும்,

இந்த திட்டம் மக்கள் மத்தியில் சென்றடைந்தால் இந்த கட்டிடத்தின் அருகே உள்ள 13.73 ஏக்கர் பரப்பளவில் காலிமனைகளையும் 145 அறைகள் கொண்ட புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்ட திட்டமிட்டிருப் பதாகவும் கூறினார்.
மேலும் இதுபோன்று பல்வேறு இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட திட்டமிட்டிருப் பதாகவும் கூறினார். அதேபோல் கிளாம்பாக்கம் பேருந்தநிலையம் கட்டிட பணியும் 95 சதவீதம் முடிந்துவிட்டபடியால் பேருந்துநிலையமும் வருகிற பொங்கல் பண்டிகைக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர இருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) சஞ்சீவனா, ஒன்றியகுழு பெருந்தலைவர் உதயா கருணாகரன், செங்கல்பட்டு வட்டாட்சியர் நடராஜன் மற்றும்
ஒன்றிய செயலாளர் ஆப்பூர் சந்தானம் மற்றும் துறைசார்ந்த அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
