BREAKING NEWS

செங்கோட்டையில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட விழிப்பணா்வு பேரணி 100 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்பு.

செங்கோட்டையில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட விழிப்பணா்வு பேரணி 100 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்பு.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.

செங்கோட்டை வட்டார வளமையத்தின் சார்பில் கச்சேரி காம்பவுண்ட் அரசு நடுநிலைப்பள்ளியில் வைத்து புதிய பாரத எழுத்தறிவு திட்ட விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலா் சீவலமுத்து தலைமை தாங்கி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

 

 

செங்கோட்டை வட்டார கல்வி அலுவலா் ஜான்பிரிட்டோ முன்னிலை வகித்தார். பேரணியில் 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கல்லாமையை இல்லாமை ஆக்குவோம், கல்வி கற்க வயது ஒரு தடையில்லை போன்ற விழி்ப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திவாறு விழிப்புணா்வு கோஷங்கள் எழுப்பியபடி ஊர்வலமாக சென்றனர்.

 

பேரணி கச்சேரி காம்பவுண்ட் அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்திலிருந்து துவங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று இறுதியாக பள்ளியில் நிறைவடைந்தது. பேரணியில் பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

 

 

நிகழ்ச்சியில் வட்டார வளமைய மேற்பார்வையாளா் சுப்புலெட்சுமி, ஆசிரியா் பயிற்றுநா் சரோஜினி, மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் கனகலட்சுமி, தயாளன், இல்லம் தேடி கல்வி மாவட்ட ஆசிரியா் ஒருங்கிணைப்பாளா் சார்லஸ் உள்பட பலா் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS