செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி போலீசார் கொடி அணிவகுப்பு!

விநாயகர் சதுர்த்தியையொட்டி, செங்கோட்டையில் போலீசாரின் கொடி அணிவகுப்பு பேரணி இன்று நடந்தது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர்.
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தென்காசி மாவட்டம் செங்கோட்டையில், விநாயகர் சதுர்த்தியை பாதுகாப்புடன் கொண்டாடும் வகையில், இன்று காலை, செங்கோட்டை தாலுகா அலுவலகம் அருகே போலீசாரின் கொடி அணிவகுப்பு பேரணி நடந்தது. தென்காசி டி.எஸ்.பி., மணிமாறன் தலைமை வகித்து போலீசாரின் கொடி அணிவகுப்பு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த கொடி அணிவகுப்பு பேரணியில் செங்கோட்டை இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தர் தலைமையிலான நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர்.
CATEGORIES Uncategorized