செம்பனார்கோவில் வடக்கு, மத்திய ஒன்றியத்தில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் நியமன ஆலோசனை கூட்டம்.

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதி செம்பனார் கோவில் வடக்கு, மத்திய, கிழக்கு ஒன்றியங்களில் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை மற்றும் பூத் கமிட்டி கூட்டம் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளருமான நிவேதா எம் முருகன் தலைமையில் நடைபெற்றது.


இதில் பூம்புகார் சட்டமன்ற தொகுதி பார்வையாளரும், மாநில இளைஞரணி திமுக துணை செயலாளர் இளையராஜா முன்னிலை வகித்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செம்பனார்கோவில் கீழ முக்கூட்டில் உள்ள அண்ணா திருமண மண்டபத்தில் செம்பை வடக்கு ஒன்றிய செயலாளர் பி.எம்.அன்பழகன், திருக்கடையூர் தனியார் திருமணமண்டபத்தில் செம்பை மத்திய ஒன்றிய செயலாளர் அமுர்த.விஜயகுமார் செய்திருந்தனர்.

கூட்டத்தில் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை மற்றும் புதியதாக ஒரு கோடி உறுப்பினர்களை சேர்ப்பது மற்றும் கட்சிப் பணி ஆற்றுவது குறித்தும் முடிவெடுக்கப்பட்டது, இந்நிகழ்ச்சிகளில் தஞ்சை மண்டல திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் பி.எம்.ஸ்ரீதர், மாவட்ட திமுக துணை செயலாளர் மு.ஞானவேலன், செம்பை தெற்கு ஒன்றிய செயலாளர் எம்.அப்துல்மாலிக், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஜயபாலன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள், பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.
