BREAKING NEWS

செய்தியாளர்களை தொடர்ந்து அவமதிக்கும் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்

செய்தியாளர்களை தொடர்ந்து அவமதிக்கும் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்

தென்காசி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் என்ன நடக்கிறது மர்மமாக உள்ளது. மேலும் சாரல் திருவிழாவின் அழைப்பிதழை அலுவலகத்தில் வந்து பெற்று செல்லுமாறு சுற்றறிக்கை அறிவித்து செய்தியாளர்களை அவமதித்த செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க செய்தியாளர்கள் கோரிக்கை. சாரல் திருவிழாவின் அழைப்பிதழில் நேரம், காலம் அறிவிக்காமல் அவசரகதியில் அழைப்பிதழ் வழங்கியது மிகப்பெரிய தவறு,

கடந்த வாரம் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் வருகையின் போது சரியான நேரம் பதிவிடாமல் செய்தியாளர்களை முறைப்படி தொடர்பு கொள்ளாமல் பல மணி நேரம் மன உ லைச்சலும், காத்திருப்பும் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம் என செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

செய்தியாளர்கள் போன் செய்தால் அழைப்பை எடுப்பது கிடையாது சரியான பதிலும் சொல்லுவதில்லை அரசியல் சம்பளத்தை வாங்கிக்கொண்டு ஏகபோக வாழ்க்கை அனுபவித்து வரும் மக்கள் செய்தி தொடர்பு அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க செய்தியாளர்கள் கோரிக்கை.

மேலும் அலுவலகத்திற்கு வராமல் மாலை நேரங்களில் வந்து பணி பதிவேட்டில் கையெழுத்து விடுவது அலுவலக வேலை நேரம் முடியும் முன்னே சென்று விடுவது கேட்டால் பல பொய் காரணங்களை கூறி வருகிறார்கள்.

அரசு சம்பளம், அரசு வாகனம் இப்படி மக்கள் வரிப்பணத்தில் உழைக்காமல் வாழும் இவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

ஆனால் செய்தியாளர்களுக்கு எந்தவித அடிப்படை வசதியும் செய்து கொடுக்காத செய்தி துறை மீது தக்க நடவடிக்கை எடுக்க தமிழக முதல்வருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது உழைக்காமல் செய்தியாளர்களை அவமானப்படுத்தும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும். விரைவில் போராட்டம் அறிவிக்கப்படும்

CATEGORIES
TAGS