BREAKING NEWS

சேலம் அருகே அதிகாலை நடைபெற்ற கோர விபத்து குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

சேலம் அருகே அதிகாலை நடைபெற்ற கோர விபத்து குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

ஆத்தூர் அருகே பெத்தநாயக்கன்பாளையத்தில் அதிகாலை நடைபெற்ற கோர விபத்து குறித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபினவ் நேரில் ஆய்வு.

 

 

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் இன்று அதிகாலை நடைபெற்ற சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் உட்பட ஆறு பேர் பலியானது.

 

 

 

அடுத்து அப்பகுதியில் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிநவ் உள்ளிட்ட அதிகாரிகள் விபத்து குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

மேலும் இந்த விபத்து எவ்வாறு நடைபெற்றது என்பது குறித்தும் காவல்துறையிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

இந்த ஆய்வின் போது வருவாய் கோட்டாட்சியர் சரண்யா வாழப்பாடி டிஎஸ்பி மற்றும் ஏத்தாப்பூர் காவல் ஆய்வாளர் பெத்தநாயக்கன்பாளையம் வட்டாட்சியர் அன்புச்செழியன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )