சேலம், எடப்பாடி பகுதியில் குடியிருப்பு பகுதிகளில் புகுந்த வெள்ள நீர்.!!! நோய் தோற்று ஏற்ப்படும் அச்சத்தில் பொதுமக்கள்.!

எடப்பாடி பகுதியில் குடியிருப்பு பகுதிகளில் புகுந்த வெள்ள நீர்.!!!
நோய் தோற்று ஏற்ப்படும் அச்சத்தில் பொதுமக்கள்.!!! சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வெள்ள நீரை விரைவாக அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள பொதுமக்கள் வேண்டுகோள்.

சேலம் மாவட்டம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சேர்வராயன் மலத் தொடரில் உள்ள ஏற்காடு, மலைபகுதிகளில் இருந்து வரும் மழை நீரானது சின்னப்பம்பட்டி, வாழக்குட்டை, ஓமலூர், போன்ற ஏரிகள் வழியாக எடப்பாடி சரபகங்கா நதியில் கலந்து பெரிய ஏரி, செட்டிப்பட்டி,அண்ணமார் கோவில் வழியாக சென்று காவிரி ஆற்றில் கலக்கும்.
இதனை தொடர்ந்து எடப்பாடி அதனை சுற்றியுள்ள அனைத்து நீர் நிலைகள் மற்றும் ஏரிகள் அனைத்தும் அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில் அவைகளின் உபரி நீரானது வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதனால் எடப்பாடியின், மையப்பகுதியான சரபங்க நதியில் அதிகப்படியான வெள்ளநீருடன் கழிவு நீரும் கலந்து அப்பகுதியில் உள்ள குடியிருப்பு வீடுகளுக்குள் முழங்கால் அளவிற்கு வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.
இதனை தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதோடு நோய் தோற்று ஏற்ப்படும் அச்சத்தில் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் மேலும், வீட்டில் உள்ள உணவுப் பொருட்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் சேதமடைந்துள்ள நிலையில்,

வெள்ளம் பாதித்த பகுதிகளை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் பார்வையிட்டு அப்பகுதியில் தேங்கியுள்ள உள்ள வெள்ள நீரை விரைவாக அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்..
