BREAKING NEWS

ஜெயங்கொண்டத்தில் அரசு வங்கியில் மின் கசிவினால் ஏற்பட்ட தீ விபத்து பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதம்.

ஜெயங்கொண்டத்தில் அரசு வங்கியில் மின் கசிவினால் ஏற்பட்ட தீ விபத்து பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதம்.

ஜெயங்கொண்டத்தில் அரசு வங்கியில் ஏற்பட்ட தீ விபத்தினால் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாயின மூன்று மணி நேரமாக போராடி தீயினை கட்டுக்குள் கொண்டு வந்த தீயணைப்பு மீட்புத்துறையினர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அரசு வங்கி பல வருடங்களாக இயங்கி வருகின்றன வழக்கம்போல் பணி முடிந்தவுடன் வங்கியினை பூட்டிவிட்டு வங்கி நிர்வாகித்தனர் சென்றுள்ளனர் இந்நிலையில் வங்கியின் உள்ளே அலாரம் சத்தம் வருவதை கண்டு வங்கியின் இரவு காவலர் சந்திரசேகரன் உள்ளே சென்று பார்வையிட்டுள்ளார்.

 

இதில் வங்கியின் ஒரு பகுதியில் தீப்பிடித்து எரிவதை கண்டு தீயினை அணைப்பதற்கு முயற்சி செய்துள்ளார் ஆனால் தீ மளவென கொழுந்து விட்டு எறிய தொடங்கியது உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார் தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயினை அணைப்பதற்கு மூன்று மணி நேரமாக போராடி தீயினை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

 

அதற்குள் அங்கிருந்த மர வகையிலான பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களான டேபிள் சேர் மின்னணு சாதனங்களான கம்ப்யூட்டர் யூபிஎஸ் மற்றும் ஏசி உள்ளிட்ட பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாயின இந்த தீ விபத்தின் காரணமாக அந்தப் பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது.

 

இதில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தவுடன் வங்கியின் மேலாளர் நீரஜ் உள்ளே சென்று பார்த்த பிறகு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது வாடிக்கையாளர்கள் பயப்பட வேண்டாம் பாதுகாப்பு பெட்டகம் உள்ள பகுதியில் எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படவில்லை என்றும் வங்கியில் இருந்த 25 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து வீணாகி விட்டன என்று தெரிவித்தார்.

 

மேலும் இந்த விபத்தினால் அந்தப் பகுதியில் எழுதும் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க ஜெயங்கொண்டம் காவல் ஆய்வாளர் ஜெகநாத் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர் மேலும் இந்த விபத்து மின் கசிவு காரணமாக நடந்ததா அல்லது மர்ம நபர்களின் நாச வேலையால் நடந்ததா என பல கோணங்களில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS