ஜெய்கிறிஸ் அறக்கட்டளை சார்பாக உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சாதனையாளருக்கு சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ விருதுகள் வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஜெய்கிறிஸ் அறக்கட்டளை சார்பில் உலக மகளிர் தினம் தனியார் திருமணம் மண்டபத்தில் வைத்து மாணவிகள் கலை நிகழ்ச்சி மற்றும் பல்வேறு துறையில் சாதனையாளருக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி ஜெய்கிறிஸ் அறக்கட்டளை நிறுவன தலைவர் ஜெயஸ்ரீ கிறிஸ்டோபர் தலைமையில் நடைபெற்றது.
விழாவில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவிகள் கலை நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பல்வேறு சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவி சத்யா, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிசாமி, ஒன்றிய செயலாளர் அன்புராஜ், ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், நகர மன்ற உறுப்பினர்கள் கவியரசன்,
செண்பகமூர்த்தி, வள்ளியம்மாள் மாரியப்பன், அம்மா பேரவை மாவட்ட இணை செயலாளர் நீலகண்டன், நகர அம்மா பேரவை செயலாளர் ஆபிரகாம் அய்யாதுரை, தொழிலதிபர்கள் விநாயகர் ரமேஷ், எஸ்.எஸ்.டிம் கல்லூரி செயலாளர் கண்ணன், வழக்கறிஞர் சந்திரசேகர், உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.